திருமதி. கந்தையா வள்ளியம்மை

கந்தையா வள்ளியம்மை

தோற்றம்: 01 மார்ச் 1933 - மறைவு: 05 மார்ச் 2025

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டை சுண்டுக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தையா வள்ளியம்மை அவர்கள் 05-03-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை - பார்வதி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

லோகேந்திரா (காசி களஞ்சியம்), சத்தியேந்திரா (கிராமசேவகர்), சாரதாதேவி (தங்கம்), காலஞ்சென்ற கல்யாணி (ஆத்தை), யோகேஸ்வரி (Arpico Insurance) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தனலட்சுமி, மகாதேவன், பத்மரஞ்சினி, சற்குணராசா, சுந்தரேஸ்வரன் (நல்லை குமரன் ரெக்ஸ் - நல்லூர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிஷாந் (Keerthiga Pharmacy, Kaasi Trading (Pvt) Ltd), கிரிஷாந் (Luxmy Super Market), கோபிகா (இலண்டன்), கீர்த்திகா (யாழ். பல்கலைக்கழகம்), கஜவதனா (கிளிநொச்சி), கஜவதனி (வவுனியா), கார்த்திகா, நவநிலா (யாழ் பல்கலைக்கழகம்), பவித்திரா (ATI), ஜனனி (யாழ்ரன் கல்லூரி) ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-03-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணியளவில் அன்னாரது சுண்டுக்குளி இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் துண்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

 

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/03/2025 05:00)