திரு. கந்தையா ஈஸ்வரன் (பொன்னு)

(பொறியியலாளர்)

கந்தையா ஈஸ்வரன் (பொன்னு)

தோற்றம்: 25 ஜூலை 1949 - மறைவு: 15 ஜூன் 2024

யாழ். நயினாதீவு பெரியபுலத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, சிங்கப்பூர், ஆப்பிரிக்கா Botswana ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திரு. ஈஸ்வரன் கந்தையா அவர்கள் 15-06-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், முருகேசு கந்தையா-விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்வராஜா-திலகவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ராஜேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

சிவதனுஷன், சங்கவை, வானதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவஞானம், திருச்செல்வம், கருணாநதி, கந்தவேல் மற்றும் திருமகள் (கனடா), ராஜலக்ஷ்மி (மணி-கனடா) ஆகியோரின் சகோதரரும்,

ராஜவதி (பிரித்தானியா), காலஞ்சென்ற செல்வகுமாரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-06-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) எனும் முகவரியில் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும். 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/06/2024 04:00)