திரு. கந்தையா கந்தசாமி
(பிரபல வர்த்தகர் (கொழும்பு- கோட்டை முதலிகே மாவத்தை Golden Money Exchange மற்றும் வவுனியா - கல்பனா மில் உரிமையாளர்)
தோற்றம்: 24 மார்ச் 1945 - மறைவு: 08 மே 2024
யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வத்திரு. கந்தையா கந்தசாமி (வேலணை பெருங்குளம் முத்துமாரியம்மன ஆலய முன்னாள் தலைவர்) அவர்கள் 08-05-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்,
காலஞ்சென்றவர்களான நாகநாதி - இராசம்மா தம்பதியினரின் மருமகனும்,
மங்கையர்க்கரசி அவர்களின் ஆருயிர் கணவரும்,
சுகந்தினி, சுரேஸ்குமார், ரிசோகுமார், துஷ்யந்தி, விஜயகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காந்திதாசன், சிவானந்தி, கிஷாணி, துவாரகன், ரம்யா ஆகியோரின் மாமனாரும்,
பிரசன்னா, கீர்த்திகா-ஜெனிஸ், கீர்த்தனா-சஜன், அம்ரேஸ், சசிற்றா, அனிக்கா, அன்சிகா, கிருஷிகா, சமித்தா, விகான் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
ஜெய்சனின் பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, கனகலிங்கம், இராசலட்சுமி, நாகம்மா, அன்னலட்சுமி மற்றும் சொர்ணமணி, பூபதி அம்மா ஆகியோரின் சகோதரனும்,
மகாலிங்கம், குமாரசாமி, காலஞ்சென்ற சிவகங்கை, சித்திரவடிவேல், பரமசிவம், விநாசித்தம்பி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 11-05-2024 சனிக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் (இல-37, 33வது ஒழுங்கை, வௌ்ளவத்தை) இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 12-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.30 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக பொரளை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
