Mr Kandaiya Sivagurunathan

(ஓய்வுநிலை களஞ்சியப் பொறுப்பாளர் - விவசாயத் திணைக்களம் - S.K)

Kandaiya Sivagurunathan

Date of Birth: 22 January 1936 - Deceased: 15 February 2024

யாழ். அளவெட்டி மத்தி பள்ளியவத்தையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அராலி அகாயக்குளம் பிள்ளையார் கோவிலடி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சிவகுருநாதன் அவர்கள் 15-02-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா - விசாலாச்சி தம்பதியினரின் சிரேஷ்ட புத்தரினும்,

காலஞ்சென்ற கதிரவேற்பிள்ளை - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பாலரஞ்சிதமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,

மீரா (கனடா), அனுரா (மலேசியா), ராஜ்மோகன் (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு (மலேசியா), சத்தியதேவி மற்றும் சுகுணாதேவி (ரூபி - கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை மற்றும் மணிமேகலை, ஞானகுமாரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கங்காதரன் (கனடா), ஜெயக்குமாரி (கொழும்பு), கஜனா (அராலி), கணாதீபன் (கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆனந்தி (மலேசியா), கணநாதன், ஜெயப்பிரியா ஆகியோரின் அன்பு பெரிய தந்தையும்,

ஜெனனி, ஜெனனா, ஹர்சினி, கஜானன், தருண், தர்ணிகா, துர்ஷன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-02-2024 திங்கட்கிழமை அன்று அகாயக்குளம் பிள்ளையார் கோவிலடியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் காலை 8.00 மணியளவில் நடைபெற்று, தகனக்கிரியைகளுக்காக பூதவுடல் முற்பகல் 10.00 மணியளவில் அராலி தெற்கு பூனாவோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/02/2024 05:00)