திரு. கந்தையா தில்லைநாயகம் (சந்திரன்)
(லோஜி (Logi) நிறுவனத்தின் உரிமையாளர்)
தோற்றம்: 26 ஜூலை 1957 - மறைவு: 09 மே 2026
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், நல்லூர், வவுனியா புளியங்குளம், மதவுவைத்தகுளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா தில்லைநாயகம் அவர்கள் 09-05-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - குஞ்சரம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகம் - தெய்வநாயகி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
ஞானேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தினேஸ்கர், கவிதா (கனடா), லோஜிதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தில்லைநாதன் (கனடா), தில்லை நடேசன் (கனடா), தில்லைநாயகி (வவுனியா), தில்லைஜோதி (பிரான்ஸ்), தில்லைமோகன் (புளியங்குளம்), தில்லையசோதாதேவி (கனடா), தில்லைராணி (பிரான்ஸ்), தில்லைராஜினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மதுசானி, சுதாகரன் (கனடா), தர்சிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
யதுஸ் (கனடா), அபிசேக், லிசான் (கனடா), தஸ்மிகா, அஸ்விதா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற தனசிறி, ரேகா, காலஞ்சென்ற பரராசசிங்கம், சரஸ்வதி, இராசேந்திரம் - காந்திமதி ஆகியோரின் பாசமிகு சம்மந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-05-2026 புதன்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பூந்தோட்டம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
