திரு கந்தப்பிள்ளை வைரவப்பிள்ளை
தோற்றம்: 14 செப்டம்பர் 1937 - மறைவு: 03 டிசம்பர் 2024
யாழ். பன்னாலையை பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை, டென்மார்க், இலண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தப்பிள்ளை வைரவப்பிள்ளை அவர்கள் 03-12-2024 செவ்வாய்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை-வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான ஆறுப்பிள்ளை-இளையபிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயபவான் (பிரித்தானியா), ஜெசிந்தா (பிரான்ஸ்), ஜெயசீலன் (பிரித்தானியா), ஜெயந்தன் (டென்மார்க்), ஜனனி (பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கௌரி, சந்திரகுமார், யுகதேவி (ஜானு), கீதா, சசிதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மாரிமுத்து, செல்வநாயகி, கந்தையா, திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், பரமேஸ்வரி மற்றும் சிவனேஸ்வரி (டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரசன்னா, பிரீத்தி, சாருஜன், பவிசன், கவிசன், கரீஸ், கரீத், விதூஸ், சனுஸ், யதின், நிவேக்கா, அஸ்வின், அர்ச்சனா, மார்க்கோ ஆகியோரின் அன்புப் பேரனும்,
கையன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
