திரு. கந்தப்பு பாலசுந்தரம்

கந்தப்பு பாலசுந்தரம்

தோற்றம்: 15 ஜனவரி 1948 - மறைவு: 27 மார்ச் 2025

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், Savigny-Le-Temple - பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தப்பு பாலசுந்தரம் அவர்கள் 27-03-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திரு.திருமதி கந்தப்பு தம்பதியினரின் பாசமிகு மகனும்,

திரு.திருமதி கந்தப்பு தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புக்கணவரும்,

பகீரதன் (கண்ணன் - ஜேர்மனி), மனோகரன் (காந்தன் - ஜேர்மனி), அகிலன் (சுதன் - பிரித்தானியா), தனஞ்செயன் (குமணன் - பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், 

பரணிகா, சுவஸ்திகா, கோபிகா, பிரமிளா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தனோஜன், சிவாஜினி, ஆரணி, அனிஸ், டிக்‌ஷா, ஆருஸ், அஹானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 31-03-2025 திங்கட்கிழமை முதல் 02-04-2025 புதன்கிழமை வரை பிற்பகல் 2.00 - 3.00 மணி வரை Hospital Center De Melun (270 Av, Marc Jacquet, 77000 Melun, France) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 03-04-2025 வியாழக்கிழமை மதியம் 1.00 - 3.30 மணி வரை Crematorium Sud 77 (395 Rue du Clos Bernard, 77310 Saint - Fargeau - Ponthierry, France) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/03/2025 04:00)