திரு. கந்தப்பு சிவகுரு
மறைவு: 06 மார்ச் 2026
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு. கந்தன் சிவகுரு அவர்கள் 06-03-2026 வெள்ளிக்கிழமை அன்று கனடா Scarborough இல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தன் - லட்சுமி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான சபாநாயகம் - இராஜேஸ்வரி தம்பதிகளின் மூத்த மருமகனும்,
சகுந்தலா அவர்களின் அன்புக் கணவரும்,
சசிகுமார், ஸயமினி, சிவரதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கதிரவேலு, கிருஷ்ணா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
அஞ்சனா, குலநாயகம், கோபிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிநயா, ஸகான், பிரவீன், பிரகதி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-03-2026 புதன்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 12-03-2026 வியாழக்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada) இல் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
