திரு. கந்தசாமி செல்லையா
(முன்னாள் தபால் ஊழியர்)
தோற்றம்: 20 ஏப்ரல் 1951 - மறைவு: 16 அக்டோபர் 2025
யாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு, புங்குடுதீவு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா கந்தசாமி அவர்கள் 16-10-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா - கண்ணம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை - நாகமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காந்திமதி (ஓய்வுபெற்ற சுகாதாரப் பரிசோதகர்) அவர்களின் அன்புக் கணவரும்,
தனுஷா, மேகலா, அனுசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற மகாலட்சுமி, லீலாவதி, செல்வராசா, சந்திரமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தரூபன், சதீஸ்நாதன், ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சிவலோகநாதன், பங்கையற்செல்வி (ஜேர்மனி), கிருபாகரன் (ஜேர்மனி), பரமேஸ்வரன் (அனலைதீவு), காலஞ்சென்ற மனோகரன் (நயினாதீவு), சகுந்தலாதேவி (டென்மார்க்), கிருபாநிதி (கனடா), இந்துமதி (இலண்டன்), பானுமதி (கனடா), கேதீஸ்வரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
பாஸ்கரன் (யாழ். போதனா வைத்தியசாலை ஊழியர்), காலஞ்சென்ற கிருபாகரன் (முன்னாள் தனியார் பேருந்து சங்கத் தலைவர்), திவாகரன், துவாகரன், பவிஷா, டிலாஷ் ஆகியோரின் அன்பு தாய்மாமனாரும்,
பிரனுகா, ஏனுகா ஆகியோரின் பெரிய தந்தையும்,
பவித்திரா (பிரான்ஸ்), டிலக்சன் (பிரான்ஸ்), தமிழினியன் (பிரான்ஸ்), விசாலன் (பிரான்ஸ்), ஆதித்தன், ஆர்த்திகா, தியானா (கிளிநொச்சி), நிஷிதா, காவியா, தன்ஷி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சர்வினின் (பிரான்ஸ்)அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மணற்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
