திரு. கந்தசாமி ஜெயராசு பிள்ளை
தோற்றம்: 10 ஜனவரி 1946 - மறைவு: 20 அக்டோபர் 2024
கண்டி-நாவலப்பிட்டி, ராசாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பண்டாரவளை கோணமுட்டாவில் வசித்தவரும் தற்போது அல்விஸ் டவுண் வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி ஜெயராசு பிள்ளை அவர்கள் 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சரோஜா அவர்களின் அன்புக்கணவரும்,
புஸ்பராஜ் (Fair First Insurance-Pettah Branch), புஸ்பமலர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிருஷ்ணகுமார், மனோ தீபா (Teacher-OKI International Wattala) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டில்ஷியா, கஸ்வின்த், கபிலாஷ், தக்ஷியா அபி, கபிக்ஷன் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் இல-495/A, நீர்கொழும்பு வீதி, மாபாகே ரேமண்ட்ஸ் மலர்ச்சாலையில் 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 22-10-2024 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.30-12.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, கெரவலப்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
முகவரி:-
இல-18/3,3 ஆம் குறுக்குத்தெரு,
அல்விஸ் டவுண், வத்தளை.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
