திரு. கந்தசாமி கனகராஜா
(இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர்)
தோற்றம்: 30 ஜூலை 1950 - மறைவு: 03 ஜூலை 2024
யாழ். சுதுமலை வடக்கை பிறப்பிடமாகவும், வவுனியா நெளுங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி கனகராஜா அவர்கள் 03-07-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கந்தசாமி-நேசமலர் தம்பதியினரின் அன்பு மகனும், சின்னத்துரை-நவமணி தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கோபிநாத், தர்சன் (முகாமைத்துவ உதவியாளர்-நீதவான் நீதிமன்றம் சாவகச்சேரி), உதயநாத் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சட்டத்தரணி தர்சிகா (பதிவாளர்- மாவட்ட/நீதவான் நீதிமன்றம் மன்னார்), ரேணுகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தியானா, யாதனா, வைஸ்ணவி ஆகியோரின் பாசமிகு பேரனாரும்,
கைலாயநாதன், தனலட்சுமி, சிறிபாலன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-07-2024 வியாழக்கிழமை அன்று அன்னாரின் சொந்த ஊரான சுதுமலை வடக்கு மானிப்பாயில் (வெள்ளுவடி வீதி) அமைந்துள்ள பூர்வீக இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் புகழுடல் பிப்பிலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
