திரு. கந்தசாமி கனகரத்தினம்
(ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர்)
மறைவு: 05 டிசம்பர் 2025
யாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வெள்ளவத்தை, மாதகல் பிள்ளையார் கோவிலடி ஆகியவற்றை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. கந்தசாமி கனகரத்தினம் அவர்கள் 05-12-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி - சிதம்பரம் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்ற செல்லையா - மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
யாழினி, தமிழினி, மாதினி, சொரூபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கேதஷஸ்வரன், காந்தீபன், துஷாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற நல்லையா, குகநாதன், நிர்மலாதேவி, ஜெகதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
இன்பவதி, கௌரி, வரதராஜா, ஈஸ்வரி, சண்முகதாஸ், சிறீஸ்கந்தராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரதீபா, பிரசன்னா, றஜீவன், மீரா, அபிராமி, சாதுரியா, பிரவீணன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
மகனிஷ், மானுஷ், மௌறிஷ், கார்திகா, வராகினி, செந்தில் குமரன், ஷலினி ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஹரிஷ், ஹரிணி, ஹாஷினி, நவயுகன், தீட்ஷண்யன், அம்ருதா, அக்ஷரா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
