Mr. Kandasamy Kumaraguruparan

Kandasamy Kumaraguruparan

Date of Birth: 20 March 1976 - Deceased: 15 May 2025

இந்தியா - திருச்சி மாவட்டம் கன்னியா குடியை பூர்வீகமாகவும், கண்டி - வத்துகாமத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கந்தசாமி குமரகுருபரன் அவர்கள் 15-05-2025 வியாழக்கிழமை அன்று அதிகாலை 5:30 மணியளவில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்தையாப்பிள்ளை - இந்திராணியம்மாள் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

அருள்தேவி அவர்களின் அன்புக் கணவரும்,

மாளவிகாயரணி, தக்ஷிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

முரளிதரன் (Miracle Wellawatte), சதீஸ் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ஸ்ரீதேவி, கேதீஸ் ஆகியோரின் கொழுந்தனாரும்,

தீனதயாளனின் மாப்பிள்ளையும்,

கைலையரசி, நித்தியகல்யாணி ஆகியோரின் மைத்துனரும்,

ரதுஷான், மூக்ஷிதா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-05-2025 சனிக்கிழமை காலை 7:00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/05/2025 04:00)