திரு. கந்தசாமி சற்குணராஜா
(உரிமையாளர் - The Quality Foods Supply (Pvt) Ltd - கிருலப்பனை, Amma Appa Arcade - கனகம்புளியடிச் சந்தி)
தோற்றம்: 14 நவம்பர் 1957 - மறைவு: 05 மே 2025
யாழ். தென்மராட்சி சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - கிருலப்பனையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி சற்குணராஜா அவர்கள் 05-05-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், சரசாலை வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற அம்பலவாணர் கந்தசாமி - தங்கம்மா தம்பதியினரின் இளைய மகனும்,
சரசாலை தெற்கைச் சேர்ந்த கனகரத்தினம் - பாலாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தங்கராசா, ஞானலிங்கம், வீரசிங்கம், காலஞ்சென்ற இரத்தின சிகாமணி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
அருந்தவமலர், அருந்தவராசா, இராசமாணிக்கம், கமலாதேவி, கமலேஸ்வரன், கருணாவதி ஆகியோரின் மைத்துனரும்,
கிஷோர்நிகா, துசாரிகா, நிரோஜா ஆகியோரின் பசாமிகு தந்தையும்,
சுகிதரன், கஜேந்திரன், சுகுணன் ஆகியோரின் மாமனாரும்,
நிஜேஷ், சௌமியா, ஆர்கலி, ஆர்விழி, இந்திரஜித், வெனேரா ஆகியோரின் பிரியமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-05-2025 புதன்கிழமை மற்றும் 08-05-2025 வியாழக்கிழமை (இல-53/11, கிருலப்பனை அவென்யூ) இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, திருவுடல் மாலை கிருலப்பனை பூர்வாராமை வீதி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
