திரு. கந்தசாமி செல்லர்

கந்தசாமி செல்லர்

மறைவு: 04 ஏப்ரல் 2026

யாழ். அச்சுவேலி பயித்தோலையைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியை வசிப்பிடமாகவும், கனடாவில் வசித்து வந்தவருமாகிய திரு. கந்தசாமி செல்லர் அவர்கள் 11-04-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார். காலஞ்சென்ற செல்லர் - பொன்னு தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்ற கணபதி - சிதம்பரம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

நல்லம்மா (குஞ்சு) அவர்களின் அன்புக் கணவரும்,

கலைமதி (டென்மாரக்), தனுஷா (கனடா), காலஞ்சென்ற பிரதீபன், காயத்திரி (கனடா), வேல்ராஜ் (கமல்-கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கங்காநிதி (டென்மார்க்), தர்மஶ்ரீ (கனடா), திருத்தணிகன் (கனடா), தேனகா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சாருஷன், சங்கரி, சதூஷன், தஜானி, சானுஜன், அஜானி, தஷ்விகா, லஷானா, சஜிசன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற தவமணிதேவி, சின்னத்தம்பி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சரவணமுத்து, பூமணி, செல்வராசா, செல்வரட்ணம், பரமேஸ்வரி, காலஞ்சென்ற சபாபதி, அன்னலிங்கம், அன்னம்மா சீவரத்தினம் (கிளி), வீரசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரிகைகளின் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/04/2026 00:00)