திரு. கந்தசாமி செல்வகுமார்
தோற்றம்: 18 ஜூலை 1967 - மறைவு: 04 ஜனவரி 2025
யாழ்,புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் மன்னார், நயினாதீவு, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி செல்வகுமார் அவர்கள் 04-01-2025 சனிக்கிழமை அன்று சுவிஸில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி - மகேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகம் - அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கஜிதன், சுஜிதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வலதா (இலங்கை), செல்வசுதா (சுவிஸ்), செல்வரூபன் (இலண்டன்), செல்வரகு (பிரான்ஸ்), செல்வகீதா (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு அண்ணனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரநாதன், மகேஸ்வரி (இலங்கை), புவீந்திரன் (இத்தாலி), புவனேஸ்வரி (இலங்கை), குபேந்திரன் (இத்தாலி), குணேந்திரன் (இத்தாலி), மங்களேஸ்வரி (சுவிஸ்), ஞானேஸ்வரி (இலங்கை), சத்தியேஸ்வரி (இத்தாலி), ரவீந்திரன் (இத்தாலி), காலஞ்சென்ற விஜியேந்திரன், சரவாணன்ந்தன் (சுவிஸ்), மதிவதனன் (சுவிஸ்), சியாமளா (இலண்டன்), காயத்ரி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்தனரும்,
சாரதாதேவி, நடேசபிள்ளை, யோகலீலா, சிவகுமார், செல்லம்மா, நித்தியகலா, சாய்சங்கர், செந்தில், செல்வலிங்கம், சுபாசினி ஆகியோாின் பாசமிகு சகலனும்,
பெறாமக்களின் அன்புப் பெரியப்பாவும்,
மருமக்களின் அன்பு மாமனாரும்,
பேரப்பிள்ளைகளின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-01-2025 செவ்வாய்க்கிழமை மதியம் 1.00 - 8.00 மணி வரையும் Parkplatz Friedhof Friedental | Stadt Luzern (Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 08-01-2025 புதன்கிழமை காலை 8.00 - 1.00 மணி வரை Krematorium (Krematorium Friedental | Stadt Luzern - Ibachstrasse 2, 6004 Luzern, Switzerland) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
