Mr. Kandasamy Tharsanan

(Samurdhi Development Officer, Chankanai)

Kandasamy Tharsanan

Date of Birth: 24 January 1978 - Deceased: 06 October 2025

யாழ். அராலி தெற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வட்டு தென்மேற்கு வட்டுக்கோட்டையை (சங்கரத்தை) வசிப்பிடமாகவும் கொண்ட திரு.  கந்தசாமி தர்சனன் அவர்கள் 06-10-2025  திங்கட்கிழமை  சிவபதமடைந்து விட்டார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி - மனோன்மணி தம்பதியினரின்  அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி - அரியமலர் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சிவகரணி (ஆசிரியை - யாழ். வேரப்பிட்டி  ஸ்ரீகணேசா வித்தியாலயம்) அவர்களின் பாசமிகு கணவரும்,

மேருக்சன், பிரவீன் (யாழ். யாழ்ப்பாணக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செந்தூரன் (பொறியியலாளர்), சுகந்தியா (ஜேர்மனி), தர்சினி (கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

செங்கமலச்செல்வி (சுற்றாடல் உத்தியோகத்தர்), காலஞ்சென்ற ரவிச்சந்திரன் (ஜேர்மனி), புவிராஜ், சிவாஜினி (சுவிஸ்), சிவயோகினி (சுவிஸ்), சிவந்தினி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜதுயன், நித்திலா, சுஜீபனா, வினோஜன், பர்ணிதா, சண்விகா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

டிலோஜன், டினுஜா, மதுசா, கவீனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-10-2025 புதன்கிழமை அன்று காலை 9:30 மணியளவில் வட்டு தென்மேற்கு, சங்கரத்தை உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் அராலி தெற்கு பூனாவோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/10/2025 05:46)