திருமதி. கந்தசாமி தவமலர்

கந்தசாமி தவமலர்

தோற்றம்: 23 மே 1935 - மறைவு: 03 ஜூன் 2025

யாழ். நாவலடி அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி தவமலர் அவர்கள் 03-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வேலுப்பிள்ளை - செல்லம்மா தம்பதியினரின் இளைய புத்திரியும்,

காலஞ்சென்ற கந்தையா - செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

உதயசிங் (நோர்வே), உதயராணி (கொழும்பு), யோகராணி (இலண்டன்), உதயராஜ் (டென்மார்க்), உதயஶ்ரீசிங் (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜானகி (நோர்வே), மணீஸ்வரன் (கொழும்பு), சுகராஜா (இலண்டன்), வினோதராணி (டென்மார்க்), பிரியதர்சினி (கனடா) ஆகியோரின் பாசத்திற்குரிய மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-06-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் சுப்பர்மடம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/06/2025 04:00)