திரு. கந்தசாமி விக்னேஸ்வரன்

கந்தசாமி விக்னேஸ்வரன்

மறைவு: 08 ஜனவரி 2026

மட்டக்களப்பு ஏறாவூறைப் பிறப்படமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா விக்னேஸ்வரன் அவர்கள் 08-01-2026 வியாழக்கிழமை அன்று ஐயனின் திருவடியில் சரணமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி - செல்வநாயகி தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற மாணிக்கராசா - கோசலாதேவி தம்பதியினரின் பாசமிகு  மருமகனும்,

பூரணகலா அவர்களின் அன்புக் கணவரும்,

தினேஸ்வரன், பவித்ரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விபாகர், தனுஷா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கிருத்தீவ், பக்தவகஷ்னா, பிரணவி, ஆதிரா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 16-01-2026 வௌ்ளிக்கிழமை அன்று இல- 13/1, பள்ளிவாசல் தெரு, நீர்கொழும்பில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/01/2026 00:00)