Mr. Kandasamy Vigneshwaran
Deceased: 08 January 2026
மட்டக்களப்பு ஏறாவூறைப் பிறப்படமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா விக்னேஸ்வரன் அவர்கள் 08-01-2026 வியாழக்கிழமை அன்று ஐயனின் திருவடியில் சரணமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி - செல்வநாயகி தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற மாணிக்கராசா - கோசலாதேவி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
பூரணகலா அவர்களின் அன்புக் கணவரும்,
தினேஸ்வரன், பவித்ரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விபாகர், தனுஷா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கிருத்தீவ், பக்தவகஷ்னா, பிரணவி, ஆதிரா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 16-01-2026 வௌ்ளிக்கிழமை அன்று இல- 13/1, பள்ளிவாசல் தெரு, நீர்கொழும்பில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
