திரு. கந்தசாமி விஸ்வலிங்கம் (கணேஷ்)
மறைவு: 15 அக்டோபர் 2025
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாயைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை 1ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி விஸ்வலிங்கம் அவர்கள் 15-10-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி - மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கோமளம் அவர்களின் அன்புக் கணவரும்,
மாலதி, வளர்மதி (குடும்ப நல உத்தியோகத்தர் - மாவட்ட வைத்தியசாலை, ஒட்டசுட்டான்), அரவிந்தன் (பிராந்திய சேவைப் பணிப்பாளர் பணிமனை - முல்லைத்தீவு, காலஞ்சென்ற பகீரதன் (அஞ்சல் அலுவலகம் - கிளிநொச்சி), மனோரஜன் (ஆசிரியர் - முல். கச்சிலைமடு பண்டாரவன்னியன் மகா வித்தியாலயம்), விஜிந்தன் (பொறியியலாளர் - திருகோணமலை), சிந்துஜா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
தெய்வேந்திரம் (ஜேர்மனி), முத்துலிங்கம், தனபாலசிங்கம் (இலண்டன்), மதியழகன், சந்திரவதனா (பிரதேச செயலகம் - முல்லைத்தீவு), மெய்யழகன் (கிளிநொச்சி வைத்தியசாலை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
தனபாலசிங்கம், தர்மராசா (வாமன்), துஷாந்தினி (ஆசிரியை - முல். ரோமன் கத்தோலிக்க பாடசாலை), ஜெசிந்தன் (யாழ். திறந்த பல்கலைக்கழகம்), தனுஜா (ஆசிரியை - முல். பட்டிக்குடியிருப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தத்ஜன், ஜஸ்மின், உயித்திரா (வவுனியா பல்கலைக்கழகம்), ரஜிராஜ் (மாணவன் - கலைமகள் வித்தியாலயம்), முல். ரோமன் கத்தோலிக்க பாடசாலை மாணவர்களான - தர்விக், சசிலா, அட்சயன் (மாணவன் - சுப்பிரமணிய வித்தியாசாலை புதுக்குடியிருப்பு), அஸ்விகா, அஸ்விகன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-10-2025 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் நாவற்காடு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
