டாக்டர். கந்தசுவாமி ரவீந்திரன்

(J.P)

கந்தசுவாமி ரவீந்திரன்

தோற்றம்: 23 ஆகஸ்ட் 1947 - மறைவு: 16 மார்ச் 2024

அனுராதபுரத்தை பிறப்பிடமாகவும், வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசுவாமி ரவீந்திரன் அவர்கள் 16-03-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசுவாமி - சரஸ்வதி தம்பதியினரின் மூத்த மகனும், 

சரோஜினி அவர்களின் அன்புக்கணவரும்,

ஜானி, சஜீவ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரசன்னா அவர்களின் அன்பு மாமனாரும்,

ஜனுஷிகா அவர்களின் பாசமிகு அம்மப்பாவும்,

சந்திரகுமார், கலாமோகன் (பெல்ஜியம்), இன்பஜோதி (லண்டன்), ஜெயராணி ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக 17-03-2024 காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை வைக்கப்பட்டு, 18-03-2024 திங்கட்கிழமை அன்றும் காலை 9.00 மணிமுதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் நண்பகல் 12.00 மணியளவில் நடைபெற்று, பூதவுடல் கல்கிசை பொது மயானத்திற்கு தகனக்கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும். 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/03/2024 04:00)