திரு. கந்தசாமி சத்தியநாதன்
(Civil Engineer)
தோற்றம்: 06 செப்டம்பர் 1946 - மறைவு: 19 நவம்பர் 2024
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி சத்யநாதன் அவர்கள் 19-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கந்தசாமி-பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,
ராதா அவர்களின் அன்புக்கணவரும்,
பிரணவனின் பாசமிகு தந்தையும்,
ஶ்ரீரங்கன் (கென்யா), சத்தியசீலன், இந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-11-2024 சனிக்கிழமை அன்று மாலை 6.00-9.00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 24-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12.00-3.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
