திரு. கந்தவனம் பாலசிங்கம் (குண்டுமணி)
தோற்றம்: 07 அக்டோபர் 1934 - மறைவு: 13 ஜனவரி 2022
யாழ். கல்வியங்காடு நல்லூர்ச்சந்தையைப் பிறப்பிடமாகவும், தென் ஆப்பிரிக்கா Botswana, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தவனம் பாலசிங்கம் அவர்கள் 13-01-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தவனம், கனகம்மா தம்பதிகளின் அருமை மகனும்,
காலஞ்சென்ற செல்லத்துரை, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற விஜயதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயபாலா (கனடா), தேவபாலா (லண்டன்), ஜெயபாலா (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கலைவாணி (வாணி- கனடா), கமலா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பிறிந்தா, பிறிந்தன், டிலன், லியா, ரேகா, தனிஷா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,
சண்முகநாதன் (மணி- கனடா), சண்முகலிங்கம் (பூராசா- கனடா), சுசீலாதேவி (புனிதம்- டென்மார்க்), மல்லிகாதேவி (மல்லி- கனடா), மதனதேவி (மதனம்- இலங்கை), விபுலானந்தன் (பிரான்ஸ்), பரராஜசிங்கம் (லண்டன்), கணேசன் (கணேசமணி- பிரான்ஸ்), கமலாதேவி (கிளி- கனடா), மிகுந்தலாதேவி (குஞ்சு- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற காங்கேயன், சரோஜினிதேவி (லண்டன்), விஜயராணி (இலங்கை), நிற்கந்தா (காந்தி- இலங்கை), ராசம்மா (கனடா), யோகேஸ்வரி (கனடா), காலஞ்சென்றவர்களான தங்கவேல்முதலி, நடராஜா, கார்த்திகேசு, எலிசபெத் (எலிசா) மற்றும் காமினி (தேவகி- லண்டன்), கமலாம்பிகை (பிரான்ஸ்), காலஞ்சென்ற தவராஜா, கண்ணபிரான் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
www.tamilthakaval.org
