Mr. Kandhaiya Sabaratnam Kandasamy (Thurai)

Kandhaiya Sabaratnam Kandasamy (Thurai)

Date of Birth: 22 October 1950 - Deceased: 13 April 2024

கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. க.ச.கந்தசாமி அவர்கள் 13-04-2024 சனிக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேரந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் - சின்னம்மா தம்பதியினரின் அன்புப்புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை (சதாசிவம்) - ஜெயலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

புஷ்பறோஜினி அவர்களின் அன்புக்கணவரும்,

மஹிந்தன் (Seylan Bank), லோகவதனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தினேஷ்கண்ணா, அம்பிகை லோஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வஷிகா, திஷான், தனிஷ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

சரஸ்வதி, செல்வராஜா (ராசன்), சாரதா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற லீலறோஜினி, விமலாதேவி, சகீலறோஜினி, லலிதறஞ்சினி, காலஞ்சென்றவர்களான ஜெயபாலசுந்தரம், சரவணபவன் மற்றும் கமலாதேவி (கமலி), இராஜகோபாலு, ரவீந்திரா, உதயகுமார், ஐங்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் புகழ் உடல் 27-04-2024 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 28-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/04/2024 04:00)