Mr. Kandia Kamalanathan

(இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர்)

Kandia Kamalanathan

Date of Birth: 08 December 1932 - Deceased: 28 November 2024

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். அளவெட்டி கும்பிளாவளைப் பிள்ளையார்பதி, மல்லாகம், பிரித்தானியா இலண்டன் Newbury Park, Wickford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா கமலநாதன் அவர்கள் 28-11-2024 வியாழக்கிழமை அன்று இலண்டனில் காலமானர்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அளவெட்டியைச் சேர்ந்த கந்தையா-நாகம்மா தம்பதியினரின் பாசமிகு மூத்த மகனும்,

மல்லாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற முத்துகுமாரு-லட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தங்கம்மா (இளைப்பாறிய ஆசிரியை - மல்லாகம்) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், சொக்கநாதன் மற்றும் கந்தநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ரோசமலர், கந்தசாமி, காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், கனகு, கந்தசாமி, ஆனந்தன், நடேசு ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

மயூரன், ரஞ்சோ ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

ஜெயகெளரி, காலஞ்சென்றவர்களான ஜெயக்குமார், ஜெயகணேஷ் மற்றும் ஜெகதீஸ்வரி, காலஞ்சென்ற சிவகுமார், ஜெயசங்கர், ஜெயபவாவாணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சிவராசா, வத்சலா, முத்துலிங்கம், சாரதா, இந்திரமோகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திலக்-வேணுலக்சுமி, நிலானி-இளவரசன், நிசாந், சிவகணேஸ்-நிரோஷா, ஜெயவத்சன், இந்துஜா-மதிசுதன், துஜீவன், மதீசன்-தாட்ஷாயினி, பிரணவன், நிரேஷ், கஸ்தூரி-கிரிசான், சாருஷன், நிரூசன்-சமீரா, தீபனா, ராகவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

யவனா, வேயோன், சேயோன், இனேஷ், மேகோன், ஆரியா, அய்ரா, இனியா, ஜெய்தேவ், கைரா, அகிலன், கவின் ஆகியோரின் அன்பு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-12-2024 காலை 8.00 மணியளவில் Hendon Cemetery & Crematorium (Holders Hill Rd, London NW7 1NB, UK) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை St Vincent’s RC Primary School (11 St Vincent St, London W1U 4DF, United Kingdom) இல் மதிய போசண உபசரிப்பு நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/12/2024 05:00)