திரு. கந்தையா அருமைத்துரை
தோற்றம்: 17 செப்டம்பர் 1935 - மறைவு: 26 ஆகஸ்ட் 2024
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், சுதுமலை மத்தி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா அருமைத்துரை அவர்கள் 26-08-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை-சின்னத்தங்கச்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
லீலாவதி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான ஜெயக்குமாரி, சுதீஸ்குமார் மற்றும் சதீஸ்குமார், சபேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற பூபாலசிங்கம் மற்றும் நினி, பாமினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பிரதீஸ்–சிந்தியா, தனேஸ்–நிவேதா, பவிதா, நிலிஸ், சஜே ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஆதித், அனன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான Dr. ஆறுமுகதாஸ், மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பத்மராணி, கனகராஜா, பாலகிருஷ்ணன், சிங்கராஜா மற்றும் பாலாம்பிகை, தர்மகுலசிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,
பிறேமிளா (பிரித்தானியா), பாஸ்கரன் (பிரித்தானியா), காலஞ்சென்ற முரளிதரன் (பிரித்தானியா), நிர்மலா (கனடா), சிவகரன் (நோர்வே) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
சியாந்தன், சயந்தன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
சசிகலா (கனடா), சசீந்திரன் (கனடா), பிரதீபன் (பிரான்ஸ்), காண்டீபன், பார்த்தீபன் (பிரான்ஸ்), திலீபன் (பிரான்ஸ்), துஷ்யந்தி (கனடா), தமயந்தி (சுவிஸ்), நிரூபன் (பிரான்ஸ்), ஜெயரூபன் (சிங்கப்பூர்), ஷோபனா, ரொசாந்தி (கனடா), ரொசாந்தன் (பிரான்ஸ்), டயன்சி (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 31-08-2024 சனிக்கிழமை மாலை 5:00–9:00 மணி வரையும், 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00–2:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2:00 மணி முதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:30 மணியளவில் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
