Mr. Kandiah Balasingam

Kandiah Balasingam

Date of Birth: 25 February 1938 - Deceased: 26 September 2023

யாழ் நுணாவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், 10ஆம் கட்டை ஒழுங்கை மாவிட்டபுரம், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் தற்போது 4ஆம் ஒழுங்கை, சாந்தசோலை வீதி, வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா பாலசிங்கம் அவர்கள் கடந்த 26-09-2023ம் திகதி செவ்வாய்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா, நாகம்மா தம்பதியரின் மூத்த புதல்வரும்,
 
அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
 
பரமேஸ்வரி (நுணாவில்), காலஞ்சென்ற நோகராசா, பாலச்சந்திரன் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
புவனேஸ்வரி (வவுனியா), காலஞ்சென்ற இராசா, நவரட்ணம் (சிறுப்பிட்டி), திருநாவுக்கரசு (சுன்னாகம்) அன்பு மைத்துனரும்,
 
பாலகுமார் (ஆசிரியர், வவுனியா வ / வ.த.ம.ம.வி), ஜெயக்குமார் (கனடா), உதயகுமார் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
கலைவாணி (ஆசிரியை), ராஜி (கனடா), தாட்சாயினி (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்
 
திவ்வியபிரனாத்,  அனக்ஷன், அக்ஷய் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 29-09-2023ம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் 4ம் ஒழுங்கை, சாந்தசோலை வீதி, மகாறம்பைக்குளத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கரியைகளுக்காக பூந்தோட்டம் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்:- குடும்பத்தினர்.
 
4ம் ஒழுங்கை, சாந்தசோலை வீதி,
மகாறம்பைக்குளம்
வவுனியா

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/09/2023 05:46)