திரு. கந்தையா பெனடிக்‌ற் பரமநாதன்

(ஓய்வுபெற்ற இலங்கைப் புகையிரத திணைக்கள சிரேஷ்ட அதிகாரி)

கந்தையா பெனடிக்‌ற் பரமநாதன்

தோற்றம்: 29 ஜூலை 1931 - மறைவு: 19 ஜனவரி 2026

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், Colliers Wood - இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா பெனடிக்ற் பரமநாதன் அவர்கள் 19-01-2026 திங்கட்கிழமை அன்று இலண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - சரஸ்வதியம்மா தம்பதியினரின் புதல்வரும்,

நாரந்தனையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சவரிமுத்து - அடைக்கலமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற செயோசியா பேர்ளி அவர்களின் பாசமிகு கணவரும்,

ரவிந்திரநாதன் (இலங்கை), றூபி (இலங்கை), முகி (பிரித்தானியா), ஜெயநாதன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

ஸ்ரெலா, காலஞ்சென்ற டட்லி தங்கராஜா, குணம் (பிரித்தானியா), ஆனந்தி (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ரங்கநதமன், பத்மாவதி மற்றும் புஸ்பவதி (பிரித்தானியா), பத்மநாதன் (அமெரிக்கா), காலஞ்சென்ற சண்முகநாதன் ஆகியோரின் அன்பு சகோதரனும்,

குணவதி, காலஞ்சென்ற S.D. பாலராஜா, கனகரத்தினம் (பிரித்தானியா), பரமேஸ்வரி (அமெரிக்கா), பரமேஸ்வரி (பிரித்தானியா) ஆகியோரின் மைத்துனரும்,

பிரதீபன் (செலான் வங்கி, இலங்கை), ரம்யா (சவூதி), Dr. சதுஜா (பிரித்தானியா), பற்றிக் (பிரித்தானியா), ஜீன் (பிரித்தானியா), Dr. அக்ஸ்ர னா (பிரித்தானியா), ஆர்மைலா (பொறியியலாளர், பிரித்தானியா), அமலீனா (மருத்துவ பீடம், இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும்,

யஷ்வந் (இலங்கை), யேக்கப் (பிரித்தானியா), சமுவேல் (பிரித்தானியா), டியானா (சவூதி), ரெயோன் (சவூதி), ஜலா (பிரித்தானியா), கியான் (பிரித்தானியா), யேடன் (பிரித்தானியா) ஆகியோரின் ஆசைப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-02-2029 சனிக்கிழமை அன்று Our Lady Immaculate Catholic Church (Tolworth, Surbiton KT6 7DG, UK) இல் அமைந்துள்ள ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் North East Surrer Crematorium  UK இல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

தொடர்புகளுக்கு:

ரவி (மகன்):- + +94 76 257 2218
பிரதீபன் (பேரன்):- +94 77 375 1911
முகி (மகள்):- +44 753 597 6795
ஜெயந்தன் (மகன்):- +44 753 944 7231

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/02/2026 00:00)