திரு. கந்தையா கோபாலப்பிள்ளை

கந்தையா கோபாலப்பிள்ளை

தோற்றம்: 27 ஏப்ரல் 1943 - மறைவு: 17 நவம்பர் 2025

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல- 188/3ம் பகுதி அம்பாள் நகர், திருவையாறை வதிவிடமாகவும், புங்குடுதீவு இறுபிட்டி 6ம் வட்டாரம், வட்டக்கச்சி  ஆகிய இடங்களில் வாழ்ந்தவரும் ஆகிய திரு. கந்தையா கோபாலப்பிள்ளை அவர்கள் 17-11-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - சிதம்பரத்தி தம்பதியினரின் அன்பு புதல்வனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சந்திரவதி, கண்ணகி, கோணேஸ்வரன், பரமேஸ்வரன், ஜெகதீஸ்வரன், ஜெகதீஸ்வரி, கேதீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,  

பாலச்சந்திரன், கேதீஸ்வரன், சுவேந்தினி, தனலக்‌ஷ்மி, பிரியதர்ஷினி, தவக்குமார், சூரியகலா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்பு தாத்தாவும் பூட்டப்பிள்ளைகளின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-11-2025 புதன்கிழமை அன்று மதியம் 01:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் இரணைமடு மொட்டப்பாலம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/11/2025 00:00)