Mr. Kandiah Jegatheesan

Kandiah Jegatheesan

Date of Birth: 17 March 1936 - Deceased: 09 November 2024

யாழ். பலகாடு காரைநகரை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா ஜெகதீசன் அவர்கள் 09-11-2024 சனிக்கிழமை அன்று அதிகாலை  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான  கந்தையா- தங்கம்மா தம்பதியினரின் அருமை மகனும்,

காலஞ்சென்றவர்களான  சிற்றம்பலம்  (வாத்தியார் மருதடி, காரைநகர்)-செல்லம்மா தம்பதியினரின் ஆசை மருமகனும்,

புனிதவதியின் ஆருயிர்க் கணவனும்,

ஜெகதாம்பிகையின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அம்பிகை, வரதராசா, சிவமணி, பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

மதுரன், சஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான தம்பிராசா, நல்லம்மா, கந்தையா, கதிரவேலு, மற்றும் ஞானாம்பிகை, மங்கையர்க்கரசி, திருஞானசம்பந்தன், காலஞ்சென்றவர்களான சோமாஸ்கந்தன், பிரமராம்பாள் மற்றும் சச்சிதானந்தன், திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.

அன்னாரின் புகழுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 12-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/11/2024 11:29)