திரு கந்தையா கந்தசாமி
(முன்னாள் காசாளர்,குணரட்ணம் ஸ்ரோர்ஸ்)
தோற்றம்: 31 அக்டோபர் 1950 - மறைவு: 03 மே 2025
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா கந்தசாமி அவர்கள் 03-05-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - பிள்ளையம்மா தம்பதியினரின் அன்பு மகனும், தம்பையா - கமலாதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சாரதாம்பாள் அவர்களின் பாசமிகு கணவரும்,
நர்மதா (அமெரிக்கா), மயூரி (பிரதேச செயலகம் - யாழ்ப்பாணம்), கோபிநாத் (கொனிக்கா கலர் லாப்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரமணசிறி (அமெரிக்கா), பிரதீஸ்வரன் (கணக்கீட்டு அலுவலகர் - அஞ்சல் திணைக்களம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுந்தரலிங்கம், காலஞ்சென்ற அமிர்தலிங்கம், மங்களேஸ்வரி, பத்மாவதி, இந்திரவதனம், வசந்தா ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-05-2025 ஞாயிற்றுக்கிழமை விநாயகர் வீதி, நல்லூர் வடக்கில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
