Mr Kandiah kandasamy

(Accountant)

Kandiah kandasamy

Date of Birth: 31 October 1950 - Deceased: 03 May 2025

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா கந்தசாமி அவர்கள் 03-05-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - பிள்ளையம்மா தம்பதியினரின் அன்பு மகனும், தம்பையா - கமலாதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சாரதாம்பாள் அவர்களின் பாசமிகு கணவரும்,

நர்மதா (அமெரிக்கா), மயூரி (பிரதேச செயலகம் - யாழ்ப்பாணம்), கோபிநாத் (கொனிக்கா கலர் லாப்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரமணசிறி (அமெரிக்கா), பிரதீஸ்வரன் (கணக்கீட்டு அலுவலகர் - அஞ்சல் திணைக்களம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுந்தரலிங்கம், காலஞ்சென்ற அமிர்தலிங்கம், மங்களேஸ்வரி, பத்மாவதி, இந்திரவதனம், வசந்தா ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-05-2025 ஞாயிற்றுக்கிழமை விநாயகர் வீதி, நல்லூர் வடக்கில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில்  திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/05/2025 19:56)