திரு. கந்தையா கந்தசாமி

கந்தையா கந்தசாமி

தோற்றம்: 19 பெப்ரவரி 1949 - மறைவு: 27 அக்டோபர் 2024

யாழ். கப்புதூவைப் பிறப்பிடமாகவும், கரணவாய் தெற்கு வீரப்பதிராயன், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா கந்தசாமி அவர்கள் 27-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா-சின்னத்தங்கம் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும்,

காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம்-லக்சுமி தம்பதியினரின் மூத்த மருமகனும்,

சத்தியவதி அவர்களின் அன்புக் கணவரும்,

உலகநாதன், வள்ளியம்மை, பரமானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, ஜெயந்தினி, வாசுகி, ரூபவதி, காலஞ்சென்ற இந்துமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயபாலன், காலஞ்சென்ற சிறிறஞ்சன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

காங்கேசன், மாசிலா, குமார் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,

மூர்த்தி, சந்திரா, காந்தன், மனோ ஆகியோரின் உற்ற நண்பனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-11-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 04-11-2024 திங்கட்கிழமை காலை 8:00 மணி முதல் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.   

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/11/2024 04:00)