Mr. Kandiah Rasentram
Date of Birth: 05 October 1940 - Deceased: 28 November 2024
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 4ம் வட்டாரம், Scarborough-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா இராசேந்திரம் அவர்கள் 28-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கந்தையா (ஜ.க)-தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை-அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தங்கமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
இரகுமாலா, சசிகலா, பிரதீபன் (அப்பன்), ஐங்கரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரமேந்திரா (இந்திரன்), கேசவராசா, சகிலா ஆகியோரின் அருமை மாமனாரும்,
ஹரிணிதா, சமிதா, நிலக்ஷன், ஆதிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான மீனாட்சி, செல்லம்மா, தர்மலிங்கம், பொன்னம்மா (அதிபர்), சிவக்கொழுந்து, திருநாவுக்கரசு (கணக்காளர்) மற்றும் நற்குணராசா (காவல்துறை அதிகாரி - பாரிஸ்), தெய்வநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி (பண்டிதர்), சுப்பிரமணியம் (அதிபர்), கனகசபை (அதிபர்), கனகலிங்கம் மற்றும் மதியாபரணம் (கனடா), நாகேஸ்வரி (கொழும்பு), முத்துலட்சுமி (பாரிஸ்) ஆகியோரின் மைத்துனரும்,
பாலசுப்பிரமணியம்- நகுலேஸ்வரி (தெல்லிப்பளை), இராசையா - பூரணம் (ஏழாலை), தவராசா (அதிபர்) - மீனலோசனி (புங்குடுதீவு) ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 02-12-2024 திங்கட்கிழமை முற்பகல் 10:30 - 11:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
