திரு. கந்தையா கதிர்காமத்தம்பி
தோற்றம்: 26 செப்டம்பர் 1940 - மறைவு: 04 அக்டோபர் 2022
மல்லாகம் சோடாக் கம்பனி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும் யாழ் நீர்வேலி வடக்கை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கதிர்காமத்தம்பி அவர்கள் நேற்று 04-10-2022ம் திகதி செவ்வாய்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லாச்சி தம்பதியரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,
புனிதவதியின் அன்புக் கணவரும்,
கஜேந்திரன் (வியாபாரம்- திருநெல்வேலி பொதுச்சந்தை), பிரதீபா (கணக்காளர்- மாகாண திறைச்சேரி வடக்கு மாகாணம்), காந்தலோசினி (அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதிப் பதிவாளர் நாயகம் அலுவலகம் வடக்கு வலயம்), நிவேதா (கணக்காய்வு உத்தியோகத்தர்- கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரதீஷன் (ஆசிரியர்- மட்டுவில் சந்திரமௌலீச வித்தியாலயம்), பிரசன்னா (சுற்றுலா வழிகாட்டி) ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்ற இராசம்மாவின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி மற்றும் நாகேந்திரம், தெய்வானைப்பிள்ளை, காலஞ்சென்ற
சின்னத்தம்பி ஆகியோரின் மைத்துனரும்,
பவிசாந்,பவிஸ்ணவி ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 05-10-2022ம் திகதி புதன்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் நீர்வேலி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
விலாசம்:-
குறுக்கு வீதி
மாசிவன் சந்தி
நீர்வேலி வடக்கு
நீர்வேலி,யாழ்ப்பாணம்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/10/2022 12:12)
