திரு. கந்தையா குகபரன்
தோற்றம்: 16 மார்ச் 1962 - மறைவு: 05 மார்ச் 2026
யாழ். காரைநகர் வேதரடைப்பைப் பிறப்பிடமாகவும், பாடசாலை வீதி, பண்டாரிகுளம் வவுனியாவை வசிப்பிடமாகவும், பத்தர்கேணி காரைநகரை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கந்தையா குகபரன் அவர்கள் 05-03-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா (முன்னாள் வர்த்தகர், தங்கோட்டுவ ) - சுந்தரம்மா தம்பதியினரின் இளைய மகனும், காலஞ்சென்ற தெய்வநாயகம்பிள்ளை - தவமணி தம்பதியினரின் மருமகனும்,
சரஸ்வரதி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்சிகா, காலஞ்சென்ற கஜானன், தனுஷன், கீர்த்தனா ஆகியேராின் பாசமிக்க தந்தையும்,
மனோன்மணி, காலஞ்சென்ற தர்மலிங்கம், கங்காதேவி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் (நமசிவாயம், நாகேஸ்வரி, கனகலிங்கம், குணரட்ணம், பொன்னம்பலம், சண்முகரத்தினம், நகுலேஸ்வரன், நாகேஸ்வரி மற்றும், மீனாம்பிகை ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் அன்னாரது காரைநகர் பத்தர்கேணி இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
