Mr. Kandiah Latchumikanthan
Date of Birth: 09 September 1950 - Deceased: 16 February 2025
யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், குரும்பசிட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா இலட்சுமிகாந்தன் அவர்கள் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா தையல்முத்து தம்பதியரின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னம்மா தம்பதியரின் அன்பு மருகனும்,
இராஜேஸ்வரி (ராஜேஸ் - குரும்பசிட்டி) அவர்களின் அன்புக் கணவரும்,
சுகாந்(லண்டன்), அனந்(லண்டன்) , றஜீந்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தனுஜா, ஜெயபிரபா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தெட்சனாமூர்த்தி, பாலசுப்பிரமணியம், தனபாக்கியம், குணபாக்கியம்,இரத்தினசபாபதி,வரதராசா மறும் கணேசன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
அனோஜன், கரிஸ், அனிஸ், அஸ்விகா, றியன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-02-2025 வியாழக்கிழமை அன்று காலை 8:00 மணியளவில் அன்னாரது குரும்பசிட்டி இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சுழிபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
