Mr. Kandiah Mayilvahanam
Date of Birth: 26 September 1930 - Deceased: 12 October 2026
யாழ். மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு - வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கந்தையா மயில்வாகனம் அவர்கள் 12-10-2026 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - செல்லாச்சி தம்பதியினரின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - அன்னமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற குப்பிளான் ஊரங்குனையைச் சேர்ந்த சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
கணேஷானந்தன் (ஜேர்மனி), ஜெயலக்ஷ்மி (இலண்டன்), வனஜாதேவி ( ஆசிரியை - சைவ மங்கையர் வித்தியாலயம் -வெள்ளவத்தை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தேனுகா (ஜேர்மனி), தயாபரன் (இலண்டன்), ஜெயந்திரன் (பிரதி ஆசிரியர் - தினக்குரல் கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை, இராசரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மிதுசா(ஜேர்மனி), மாதவன் (ஜேர்மனி), மிலானி (ஜேர்மனி), நிர்மிதா (டொக்டர் - இலண்டன்), நீவிதா (டொக்டர் - இலண்டன்), நிஷாங்கன் (இலண்டன்), ஆருஷன் (கொழும்பு), அபிஷனா (கொழும்பு), அக்ஷனா (கொழும்பு) ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இல- 42, பொஸ்வெல் பிளேஸ், வெள்ளவத்தையிலுள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 15-10-2026 வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10.30 மணியளவில் திருவுடல் கல்கிஸை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 644 9885
www.tamilthakaval.org
