(4-01-2026 புதன்கிழமை காலை 9:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்றது)

Mr. Kandiah Nadarasa

(முன்னனாள் கூட்டுறவு சங்க முகாமையாளர், அச்சுவேலி)

Kandiah Nadarasa

Date of Birth: 13 January 1943 - Deceased: 12 January 2026

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், புன்னாலைக்கட்டுவன் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா நடராசா அவர்கள் 12-01-2026 திங்கட்கிழமை இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - சின்னாச்சி தம்பதியரின் அன்பு மகனும்,

இராசராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

மகாலிங்கம் (ஜேர்மனி), கோபாலகிருஷ்ணன் (டென்மார்க்), காலஞ்சென்றவர்களான கமலாதேவி, பரிமளாதேவி, வகிர்தநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான இராமசாமி, சரஸ்வதி, நவரத்தினம், சந்திரதேவன் மற்றும் சரோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிறீகரன் (பிரான்ஸ்), சிறீதரன் (பின்லாந்து), சிறீரஞ்சினி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லாவண்யா, வணிதா, ராஜேந்திரலிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஸ்வின், ஆதர்ஷா, ஜெய்ஷா, மாதுஷா, ஆருஷன், அபிஷிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 14-01-2026 புதன்கிழமை காலை 9:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் புன்னாலைக்கட்டுவன் விலங்கன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/01/2026 05:50)