திரு. கந்தையா நேசராசா (நேசன்)
தோற்றம்: 05 ஜனவரி 1951 - மறைவு: 24 அக்டோபர் 2025
யாழ். வேலணை 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா நேசராசா அவர்கள் 24-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவகுரு - யோகவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
யோகராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுஜீவன், சிந்துஜன், மதுஷன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
தர்மி, மிதுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அச்சுதன், யாதனா ஆகியோரின் அன்புப் பேரனும்,
பரமேஸ்வரி, முத்துலட்சுமி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், மீனலோஷினி, விமலசோதி, யோகநாதன் ஆகியோரின் பாசமிக்க சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8:00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 1:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
