Mr. Kandiah Pankayatselvan
(சமாதான நீதவான், முன்னாள் உரிமையாளர், கருமாரி றேடர்ஸ், கொழும்பு)
Date of Birth: 29 June 1954 - Deceased: 30 September 2025
யாழ். வேலனை மேற்கு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வத்தளை - கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா பங்கயற்செல்வன் அவர்கள் 30-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா - தெய்வானப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சுசீலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
திவாகரன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
தேனுஜா (ஆசிரியை - லைசியம் சர்வதேச பாடசாலை - வத்தளை) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற புனிதவதி, நாகேஸ்வரி, பவநாதன், சரஸ்வதி, சதாசிவம் (ஓய்வுநிலை ஆசிரியர் - யாழ்ப்பாணக் கல்லூரி) காலஞ்சென்ற இரஞ்சித்குமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-10-2025 வியாழக்கிழமை அன்று மதியம் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, கெரவலப்பிட்டிய இந்து மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
இல- 49/39/0, மயான வீதி,
ஹெந்தளை, வத்தளை.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
