திரு. கந்தையா இராஜேந்திரன்

கந்தையா இராஜேந்திரன்

தோற்றம்: 09 நவம்பர் 1945 - மறைவு: 27 பெப்ரவரி 2025

யாழ். செட்டிக்குறிச்சி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், இல-30,1A, IBC வீதி, வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா இராஜேந்திரன் அவர்கள் 27-02-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - பார்வதி தம்பதியினரின் அன்பு மகனும், 

இராஜ இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

மச்சகந்தி, பிருந்தை, ஜனார்த்தனன், ரிஷிகேஷன் ஆகியோரின் அன்பு தந்தையும்,

T. பிரதீபன், A. பிரதீபன், பிரவீணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அக்ஷயா, மதுஷாலா, காவ்யா, ஆரபி, தேவ்சரண் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-02-2025 வெள்ளிக்கிழமை காலை 8:00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 1:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் புகழுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/02/2025 05:00)