திரு. கந்தையா இராசரத்தினம்
தோற்றம்: 14 ஆகஸ்ட் 1942 - மறைவு: 12 ஜனவரி 2025
யாழ். சுதுமலை வடக்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா இராசரத்தினம் அவர்கள் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா - கண்மணி தம்பதியினரின் மூத்த புதல்வனும்,
காலஞ்சென்ற சுப்ரமணியம் - சுந்தரம்மா தம்பதியினரின் மூத்த மருமகனும்,
காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சுகந்தி, ஜெயந்தி, காலஞ்சென்ற ஜெயக்குமார், சுகுமார், ஆனந்தி, அருந்ததி, ஶ்ரீலக்ஷ்மி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வராஜா, ஜெயக்குமார், சித்திரா, வக்சலா, பிறேமதாசன், சுரேஸ்குமாரன், காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன் ஆகியோரின் ஆசை மாமனாரும்,
சுப்ரமணியம், விக்கினேஸ்வரி, ஜெகசோதி, காலஞ்சென்ற நவரட்ணம் ஆகியோரின் மூத்த சகோதரனும்,
சந்திராவதி, காலஞ்சென்ற பொன்னுத்துரை, கணபதி, பவளமணி, காலஞ்சென்ற மகாலக்ஷ்மி, பாக்கியலக்ஷ்மி, ஶ்ரீஸ்கந்தராஜா, யோகலக்ஷ்மி, காலஞ்சென்ற நித்தியலக்ஷ்மி ஆகியோரின் மைத்துனரும்,
வினோதினி - பகீரதன், நிஷாந்தினி - தசரதன், நிரோஜன் - திவ்யா, சாருஜன், ஜெரூசன் - வாகினி, ஜெர்சிகா - நிரூஜன், திவாகர், அகிஷா, ஆதுஷா, விதுஷா, அர்த்தனா, அகானா, அர்த்திகன், இனியா, இலக்கியா, இதயா, சதுர்ஷன், பிரதிஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,
லக்ஷ்மிதா, மதுமிதா, விஷ்வா, இலக்கியன், கல்கி, கயல், யாத்திரா, அர்ஜீனன், இராவணன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-01-2025 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
