திரு. கந்தையா சச்சிதானந்தம்
(ஓய்வுநிலை ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளார்)
தோற்றம்: 17 மே 1933 - மறைவு: 23 பெப்ரவரி 2023
யாழ் பன்னாலையைப் பிறப்பிடமாகவும், அம்பனை தெல்லிப்பழையை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சச்சிதானந்தம் (ஓய்வுநிலை ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளார்) அவர்கள் இன்று காலையில் இறைவனடி சேர்ந்தார்.
இவர் சிவயோகநாயகியின் அன்புக்கணவரும்,
அநிதா (கனடா), அமுதா, அருணன் ஆகியோரினது பாசமிகு தந்தையும்,
திருமுருகாவின் (கனடா) அன்பு மாமனாரும்,
ரக்ஷிகா, ரக்ஷனா ஆகியோரினது அன்புப் பாட்டனாரும்,
திலகவதி, புனிதவதி , காலஞ்சென்ற சிவானந்தம் ஆகியோரினது அன்புச் சகோதரனுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் இன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பிற்பகல் 2 மணியளவில் தகனத்திற்காக கீரிமலை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதை அறியத் தருகின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
