Mr. Kandiah Sayalolibavan
(ஓய்வு பெற்ற பொறியியலாளர் மற்றும் Renault Car Company's Technician)
Deceased: 30 December 2025
யாழ். தொல்புரம், சுழிபுரம் "பரிமாள வாசம்" த்தை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சயலொளிபவன் அவர்கள் 30-12-2025 செய்வாய்க்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா- பாக்கியம் தம்பதியினரின் பாசமிகு புதல்வனும்,
சிவானந்தி (ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியை) அவர்களின் கணவரும்,
சேந்தனின் (பிரான்ஸ் தூதரகம்- பங்களாதேஷ்) தந்தையும்,
காலஞ்சென்றவர்களான விசாகபூஷணம் (கனடா - ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர்), விசாகரத்தினவேல் (மூளாய் - இயந்திர வல்லுநர்), சரவணபவன் (நவாலி - ஓவியர்) மற்றும் லிமா லோகேஸ்வரி (யாழ்ப்பாணம் - ஓய்வு பெற்ற சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர்), கோமதிதேவி (வடலியடைப்பு - ஓய்வு பெற்ற ஆசிரியை - யாழ் மத்திய கல்லூரி), ஸ்கந்தமலர் (பிரான்ஸ் - சங்கானை யூனியன் முன்னைநாள் சேலை வடிவமைப்பாளர்), குகபூஷணி (சுழிபுரம் - ஓய்வு பெற்ற சங்கானை இலங்கை வங்கி முகாமையாளர்), கோடீஸ்வரி (ஜேர்மனி - B.Com), ஸ்ரீகெளரி (இங்கிலாந்து - விநியோக மற்றும் பொருட்கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளர்), கேதீஸ்வரி (கனடா- ஓய்வு பெற்ற வங்கி உத்தியோகத்தர்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான முருகையா (கனடா- ஓய்வு பெற்ற அதிபர்), சிவமணி (மூளாய்), மரியதாசன் (யாழ்ப்பாணம் - ஓய்வு பெற்ற சுகாதார வைத்திய அதிகாரி), செல்வநாதன் (வடலியடைப்பு - ஓய்வு பெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், கச்சேரி), அல்போன்ஸஸ் (இங்கிலாந்து) மற்றும் கமலாதேவி (நவாலி), குகதாஸன் (பிரான்ஸ்), இராமலிங்கம் (சுழிபுரம் - ஓய்வு பெற்ற அதிபர் யாழ். வட்டு இந்து கல்லூரி), சோமசுந்தரம் (ஜேர்மனி), சிவபாதம் (கனடா - இசைக் கலைஞர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் 04-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பொன்னாலை வீதி, மூளாயிலுள்ள அன்னாரின் மூத்த சகோதரர் திரு.விசாகரத்னவேல் அவர்களது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பிற்பகல் 2.30 மணியளவில் யாழ். கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
