திருமதி. கந்தையா செல்லம்மா

கந்தையா செல்லம்மா

தோற்றம்: 11 ஜனவரி 1933 - மறைவு: 12 செப்டம்பர் 2024

யாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Mississauga-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தையா செல்லம்மா அவர்கள் 12-09-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்-நாகம்மா தம்பதியினரின் செல்வப் புதல்வியும்,

காலஞ்சென்ற வேலாயுதம்-தெய்வானை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேலாயுதம் கந்தையா அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,

வாமதேவன், சறோஜினிதேவி, காலஞ்சென்றவர்களான கோகிலாம்பாள், வாசுதேவன் மற்றும் உலகேஸ்வரி, கிருபாகரன், கோபாலகிருஸ்ணன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நேசரதி, கனகலிங்கம், காலஞ்சென்ற யோகேஸ்வரன், கேதீஸ்வரன், அனுஷா, சுதர்ஷனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுபகாந்-ஜொய்சி, ஜசிகாந்-நிதுஷா, நிவேக்காந், சாந்தரூபன்-சர்மிளா, நிஷாத், பிரேம்நாத்-ஜிவாகினி, சுகாந், கஜேந், லொஷாந், அபிரா, கோபிகா, வாசுகி, கோகுலன், தன்சயன், லக்‌ஷ்வி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ரிஷா, ரிஷான், கிருஸ்ணா, சுஜானி, விரா ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான யோகம்மா, பூபாலபிள்ளை, ஆறுமுகம், தங்கம்மா, வள்ளியம்மை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தங்கம்மா, கிருஸ்ணசாமி (சம்பந்தர்) மற்றும் கணேசன், காலஞ்சென்றவர்களான சற்குணம், சண்முகம், கைலாயபிள்ளை மற்றும் கமலாம்மாள், கதிரவேலு ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-09-2024 சனிக்கிழமை மாலை 5.00-9.00 மணி வரையும், 15-09-2024 காலை 9.00-10.00 மணி வரையும் பார்வைக்காக St. John's Dixie Cemetery & Crmatorium (737-Dundas Street East, Mississauga, ON, L4Y 2B5) இல் வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்

   அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/09/2024 04:00)