திரு கந்தையா செல்வகுணச்சந்திரன் (செல்லர் மாஸ்டர்)
(தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரி பழையமாணவர் மற்றும் முன்னாள் ஆசிரியர்,)
தோற்றம்: 08 ஜனவரி 1942 - மறைவு: 21 நவம்பர் 2019
மலேசியாவை பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை, பன்னாலை, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா செல்வகுணச்சந்திரன் அவர்கள் 21-11-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
காலஞ்சென்ற கந்தையா, தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
வட்டுமேற்கு வட்டுக்கோட்டையை சேர்ந்த காலஞ்சென்ற இரத்தினசபாபதி, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
துளசிகாந்தி அவர்களின் அன்புத் தந்தையும்,
ஆன் டொரற்ரா அவர்களின் அன்பு மாமனும்,
காலஞ்சென்றவர்களான பாலசந்திரன், திருஞானச்சந்திரன், குமாரச்சந்திரன் மற்றும் சந்திரவதி சண்முகராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான றோசமலர் சண்முகநாதன் மற்றும் யோகநான்(சிங்கப்பூர்), லீலாதேவி, விமலாதேவி(வட்டுக்கோட்டை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அரியஸ்கண்ணா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
