திரு கந்தையா சண்முகசுந்தரம்
((இளைப்பாறிய இரசாயனவியல் ஆசிரியர் - உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி, ,)
மறைவு: 29 டிசம்பர் 2019
கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சண்முகசுந்தரம் (இளைப்பாறிய இரசாயனவியல் ஆசிரியர்) அவர்கள் நேற்று (29.12.2019) ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்து விட்டார்.
அன்னார் காலஞ்சென்ற பண்டிதர் கந்தையா - சின்னம்மா தம்பதியரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி - மாணிக்கம் தம்பதியரின் மருமகனும்,
ஆனந்தமலரின் (பவளம்) அன்புக் கணவரும்,
அரவிந்தன் (அமரர்), முகுந்தன் (கனடா), அபிராமி (கனடா), இளவேந்தன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சண்முகலிங்கம் (அமரர்), சண்முகம் சோதி (அமரர்), தணிகாசலம், சண்முகரத்தினம் (அமரர்), மனோரஞ்சிதம் (கனடா), மதுரைமீனாட்சி (அமரர்), இந்திராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பிரமேந்திரதீசன் (கனடா - காரை நியூஸ் தொகுப்பாளர்), குமுதா (ஜேர்மனி) ஆகியோரின் மாமனாரும்,
பரமேஸ்வரி (அமரர்), செல்வநாயகம் (அமரர்), செல்வராஜா (கனடா), வசந்தமலர் (கனடா) ஆகியோரின் மைத்துனரும்,
அகிலதாஸ், கிருபா ஆகியோரின் சிறிய தந்தையும்,
பானு (லண்டன்), பாபு (அவுஸ்திரேலியா), மனோஜி, ஜெந்து (கனடா) ஆகியோரின் மாமனாரும்,
பிரவின் (கனடா), விஷ்வா (கனடா), தீபிகா (கனடா), அர்த்தனா (ஜேர்மனி) ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (31.12.2019) செவ்வாய்க்கிழமை மு.ப 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பூவரசம்திட்டி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
"அரவிந்தம்"
கரணவாய் தெற்கு,
கரவெட்டி.
இலங்கை : +94 21 226 3562
முகுந்தன் (வாட்ஸ்அ ப்இல.) : +1 416 830 3102
அபிராமி - (வாட்ஸ்அ ப்இல.) : +1 416 838 9575
இளவேந்தன் (வாட்ஸ்அ ப்இல) : +49 17 64 059 4034
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/12/2019 04:31)
