திரு. கந்தையா (பெரிய உபாத்தியார்) சிவராஜசூரியர்
தோற்றம்: 10 மார்ச் 1947 - மறைவு: 08 மார்ச் 2025
யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, ஜேர்மனி - Oberhausen, அமெரிக்கா - Boston ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சிவராஜசூரியர் அவர்கள் 07-03-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா-புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், சபாரத்தினம்-ரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
வசந்தராணி அவர்களின் அன்புக் கணவரும்,
அம்பிகா, தனுஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Rafael Cabrera, Ricky Patel ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரேயன், லியோ, ரென்சோ, ரெமி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான கேதாரகெளரி, இராஜராஜேஸ்வரி மற்றும் நாகேஸ்வரன், பிறைசூடி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம், பரராஜசிங்கம் மற்றும் சியாமளா , சரோஜா, மனோகரன், காலஞ்சென்ற செல்வரட்ணம், லோகராணி, பாலரட்ணம், ஜீவரட்ணம், யோகரட்ணம், ஜெயராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-03-2025 வியாழக்கிழமை மாலை 5:00 - 7:00 மணி வரை Edward Sullivan Funeral Home (43, Winn St Burlington, MA 01803) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 14-03-2025 வெள்ளிக்கிழமை காலை 9:00 மணியளவில் Merrimack Cremation (10 Henry Clay Drive, Merrimack,NH 03054) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
